#Udayar-novel
Udayar (novel)
Udayar (உடையார்) is a Tamil novel written by Balakumaran. The story is written in six volumes, and is a sequel to Ponniyin Selvan depicting Rajaraja Chola's rule and the construction of the big temple at Tanjore c. 1000 CE. The story's first part
Read More..
Ratings
Likes
2
Reviews
7
None
8 years ago
பொன்னியின் செல்வன் ஒரு கற்பனைப் புதினம். ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன் போன்றவை கற்பனைப் பாத்திரங்கள். இதில் சேந்தன் அமுதன் அரியணை ஏறும்வரையிலான சம்பவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன, சில பல கற்பனைச் சம்வங்களோடு. இவ்வாறு கூறுவதால் கல்கியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். எள்முனையளவும் எனக்கு அத்தகைய நோக்கம் கிடையாது.உடையார், ராஜராஜ சோழனின் வாழ்வை வேறு தளத்தில் அலசுகிறது. ராஜராஜரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களான தேவார மீட்பு, பெரிய கோயிலைக் கட்டுவித்தல், அதிமுக்கியமாக அவருடைய அந்திமக் காலம் ஆகியவை பொன்னியின் செல்வனில் கூறப்படவில்லை. அந்தக் குறையை உடையார் போக்குகிறது. மேலும் ராஜராஜர் நிகழ்த்திய முக்கியமான யுத்தங்களைப் பற்றியும், அவருடைய காலத்தில் இருந்த சமூகத்தின் அமைப்பையும் பற்றி உடையார் அலசுகிறது. பொன்னியின் செல்வன் நூல் ராஜராஜரை ஒரு காதல் இளைஞனாக (சாக்லேட் பாய்), பிள்ளைக் குறும்புகள் மாறாத ஒரு இளைஞனாக மட்டுமே காட்டுகிறது. முதிர்ந்த அறிவுடன் ஒரு மகத்தான தியாகத்தைச் செய்யும் மகோன்னதத்துடன் அந்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது.உடையாரில் அவருடைய காதல் வாழ்வு மட்டுமல்லாது அவருடைய மணவாழ்வும் விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதிர் பருவத்தில் பஞ்சவன் மாதேவிக்கும் அவருக்கும் இடையே நிலவிய அனுக்கமான காதல் வாழ்வு பொன்னியின் செல்வனில் விவரிக்கப்பட்ட அருண்மொழிக்கும் வானதிக்கும் இடையிலான காதல் வாழ்வைப் போன்றே சுவைபடக் கூறப் பட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ்த்த இயலாத மகோன்னதங்களை நிகழ்த்திக் காட்டிய ராஜராஜரின் வாழ்வை கல்வெட்டு மற்றும் தாமிரப் பட்டய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் காவியம் உடையார்.ராஜராஜரைத் தவிரவும், பெரிய கோயில் என்ற கலை அதிசயத்தின் கட்டுமானக் காலத்தில் அதற்கு உறுதுணையாக இருந்த பலருடைய வாழ்வையும் விவரிக்கிற நூலாகவும் உடையார் விளங்குகிறது.உளியின் ஓசை என்ற திரைப்படம் கூட பெரிய கோயிலின் கட்டுமானத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிற்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையே.பொன்னியின் செல்வனைப் போலவே உடையாரும் வாசிப்பிற்குகந்த ஒரு நல்ல நூல் என்பதே இதன் வாயிலாக நான் கூற விழைவது.- ஒரு இணையதளத்தில் படித்தது
1 Like
1 DisLike
Popularity
Ranks
This #hashtag is not ranked yet.