#TheExorcist
The Exorcist (film)
The Exorcist is a 1973 American supernatural horror film directed by William Friedkin and produced and written for the screen by William Peter Blatty, based on the 1971 novel of the same name by Blatty. The film stars Ellen Burstyn, Max von Sydow,
Read More..
Ratings
Likes
1
Reviews
1
The Exorcist - சபிக்கப்பட்ட திரைப்படம் !
என்னுடைய பள்ளி நாட்களில் மதுரை நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ் ஆனது இந்தப் படம். இந்தப் படத்தை தனியே அமர்ந்து பார்ப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவியது. பல பேர் திரையரங்கிலேயே மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பள்ளியில் மாணவர்கள் அனைவரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.குமுதம் வார இதழில் இந்தப் படத்தின் கதை தொடராக வெளியானது. அதை நான் முழுதுமாக வாசித்தேன்.அப்போது இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு அனுமதியில்லை. ஆனால் பத்து வருடங்களுக்குப் பின்னர் மதுரை அமிர்தம் திரையரங்கில் இந்தப் படத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. மிகவும் அருமையான செவ்வியல் படைப்பாக இந்தப் படத்தை நான் உணர்ந்தேன். ஆனால் எல்லோரும் சொன்னபடி மிரட்டும் அளவிற்கு படத்தில் ஏதுமில்லை. குறிப்பாக பேய்ப் படங்களில் வழக்கமாக மிரட்டும் தடாலடி இசை இந்தப் படத்தில் இல்லை.இப்போது இந்தப் படத்தின் இணைப்பு தற்செயலாக Netflix ல் கண்ணில் பட்டது. உடனடியாகப் பார்க்க உட்கார்ந்தேன். மிக நேர்த்தியான கதை சொல்லல் மற்றும் ஆகச் சிறந்த ஒளிப்பதிவுடன் அமைதியாக அச்சுறுத்தியது படம்.இணையத்தில் படத்தைக் குறித்த தகவல்களைத் தேடிய போது தான் உண்மையாகவே நான் அதிர்ந்து போனேன். ஆம்...இந்தத் திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே, படத்தில் பணியாற்றிய பலரைப் பாடாய்ப்படுத்தியிருக்கிறது.The Exorcist நாவல் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் 1970 ம் ஆண்டு வில்லியம் பீட்டர் பிளாட்டி என்ற நாவலாசிரியரால் எழுதப்பட்டது.ஜார்ஜ் டவுனில் பேய் புகுந்து கொண்டதாகக் கருதப்பட்ட ஒரு சிறுவனுக்கு, கத்தோலிக்கப் பாதிரிமார்களும், ஜார்ஜ் டவுன் பலகலைக்கழக மருத்துவமனையும் இணைந்து போயோட்டும் வேலையைச் செய்தனர். அந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் எழுதப்பட்டதே இந்த நாவல்.நாவலில் சிறுவனின் கதாபாத்திரம் சிறுமி என்பதாக மாற்றப்பட்டது. அந்தச் சிறுவன் பின்னாளில் குணமடைந்து நாசாவில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. அவனுக்கு பேய் பிடித்த போது நடந்த சம்பவங்கள் ஏதும் நினைவில் இல்லையாம்.The Exorcist நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கினார் இயக்குனர் வில்லியம் பிரேட்கின். மேக் நெயில்ஸ் என்பவரின் வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. முதல் நாளிலேயே வீட்டின் கீழ் தளம் தீப்பிடித்துக் கொண்டது. பேய் பிடித்த சிறுமி ரேகன் படுத்திருக்கும் அறையைத் தவிர மற்ற எல்லாமும் எரிந்து போயின. அந்தப் படுக்கையறை மட்டும் எந்தப் பாதிப்புமின்றி அப்படியே இருந்தது. பின்னாளில் புறா ஒன்று எலக்ட்ரிகல் சர்க்யூட் போர்டில் அடிபட்டதால் தீ விபத்து நேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது.படப்பிடிப்பில் ரேகனின் தாயாக நடித்த நடிகை எலன் பஸ்டின், பேயால் தூக்கி எறியப்படும் காட்சியில் உண்மையாகவே அடிபட்டார். இரத்தத்துடன் அவர் துடித்து விழும் அந்தக் காட்சி படத்தில் அப்படியே பயன்படுத்தப்பட்டது.படத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மேக்ரூன் மற்றும் நடிகை வசிலிகி மேலியாரோ ஆகிய இருவரும் அவர்களது கதாபாத்திரத்தை நடித்து முடித்த பின்னர், படப்பிடிப்பு முழுவதும் முடியாத நிலையில் திடீரென இறந்து போயினர். படத்தில் அவர்களது கதாபாத்திரம் எப்படி இறந்ததோ , கிட்டத்தட்ட அதே போன்ற விபத்து அவர்களுக்கு நடந்திருந்தது.மேக்ஸ் ஒன் ஷிடோ என்ற நடிகரின் முதல் நாள் படப்பிடிப்பில் அவரது மகன் இறந்து போனதாக செய்தி வந்தது. அந்த செய்தி வந்த சில நிமிடங்களுக்குள் பேய் பிடித்த சிறுமியாக நடித்த லிண்டா ப்ளேரின் தாத்தா இறந்து போனதாக அடுத்த செய்தி வந்தது. கட்டிலில் இருந்து மேலே பறக்கும் காட்சி படமாக்கப் படுகையில் லிண்டாவிற்கு முதுகில் அடிபட்டது. மேலும் படம் வெளியானதும் அவளுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததன.படத்தில் பாதிரியாராக வரும் டெமின் காராஸ் என்ற நடிகரின் மகன் படப்பிடிப்பில் அவர் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனான்.மெர்சிடஸ் மெக் கேம்ப்ரிட்ஜ் என்ற நடிகையின் மகன் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.படம் வெளியான திரையரங்குகளில் பெண்கள் வாந்தி எடுத்தார்கள். பலர் மயங்கி விழுந்தார்கள். இன்னும் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆதாலால் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆம்புலன்ஸ் வெளியில் தயாராக நிறுத்தப் பட்டது.வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இந்தப் படத்தின் வசூலை விட நஷ்ட ஈடு அதிகமாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.பல நாடுகளில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது.இந்தப் படத்தின் பிலிம் சுருள் சாத்தானின் சக்தியைக் கொண்டிருப்பதாக ரோமன் கத்தோலிக்க சபை கண்டனம் தெரிவித்தது.மேலும் தங்களின் உணர்வுகள் இந்தப் படத்தில் புண்படுத்தப் பட்டதாக வழக்கு தொடர்ந்தது.சபிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை எந்தவிதச் சலனமும் இன்றி முழுமையாகப் பார்ப்பவர்கள், தங்களை ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!
1 Like
DisLike
Popularity
Ranks
This #hashtag is not ranked yet.